பக்கம்:தெய்வ மலர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

தாயின் கர்வம் நிறைந்த முகத்தைப் பார்த்து திரும்பி வேறுபுறம் பார்த்துக் கொண்டு நின்றது.

என்னை உ ைக்குப் பிடிக்கவில்லையா? இல்லை புரிய வில்லையா? என் ஆசை மகனே! நான் சொல்வதைக் கேள்! அப்பொழுதுதான் என் மனம் உனக்குப்புரியும்! என்று தன் கன்றுக்குட்டியைக் கூப்பிட்டுப் பேசியது.

என்னதான் தன் தாய் பேசப்போகிருள் என்று வேண்டா வெறுப்பாக திரும்பிப் பார்த்தது கன்ஜக் குட்டி.

நம்மை ஏன் எருமை மாடு என்று இந்த மனிதர் கள் கூப்பிடுகின்ருர்கள். அதனுல்தான் அவர்கள்

மேல் எனக்குக் கோபம்.

பிறகு நம்மை எப்படிக் கூப்பிட வேண்டும் என் கிருய்? என்றது கன்றுக்குட்டி

சின்ன யானே என்று கூப்பிட வேண்டும். நமக் கும் யானைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? யானை எவ்வளவு கறுப்போ, அவ்வளவு கறுப்பாக நாம் இருக்கிருேம். அதுவும் அசைகிறது. நாமும் அசைந்துதான் நடக்கிருேம். அதற்கும் இரண்டு கொம்பு. நமக்கும் இரண்டு கொம்பு. இப்படி எல்லாவற்றிலும் நிறைய ஒற்றுமை இருக்கிறதே! என் கூப்பிடக் கூடாது? கோபமாகப் பேசியது தாய்

எருமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/67&oldid=580340" இலிருந்து மீள்விக்கப்பட்டது