பக்கம்:தெய்வ மலர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கோழிக் குஞ்சைப் பிடித்தால் பயந்து கொண்டு. சத்தம் போடுமே! அதற்காக, அந்த நரி கோழிக் குஞ்சின் கழுத்தைத்தான் முதலில் கெளவிப் பிடிக்கும். கழுத்தைப் பிடித்தால் அது எப்படி சத்தம் போடும்? இப்படியே நரி, கோழிக் குஞ்சுகளைக் கொன்று தின்று கொழுத்துக் கொண்டிருந்தது.

ஊரில் உள்ளவர்கள் எல்லாம், கோழிக் குஞ்சுகள் காணுமல் போவதை அறிந்து, முதலில் தேடிப்

பார்த்தார்கள். அப்பொழுதும் ஒன்றும் தெரிய வில்லை. எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டு மென்று முயற்சி செய்தார்கள். அவர்களால்

முடிய வில்லை.

கூட்டம் போட்டார்கள். சிலர் சத்தம் போட்டார்கள். பிறகு யோசனை செய்தார்கள் அதன்படி அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். எப்படி கோழிக் குஞ்சுகள் காணுமல் போகிறது என்பதைக் கண்டுபிடிக்க, வீட்டுக்கு ஒரு ஆள், ஒரு ஒருநாள் காவல் காக்க வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள்.

திட்டப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆள். காவல் காத்து வந்தும், திருட்டு நிற்கவில்லை. இரண்டு நாள் எதுவும் காணுமல் போகாது. காவல்காரர் கொஞ்சம் அயர்ந்து இருந்தால், மூன்ரும் நாள் கோழிக் குஞ்சுகள் காணுமல் போய் விடும். நரி, மிகவும் தந்திரமாகத் திருடித் தின்று வநதது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/8&oldid=580281" இலிருந்து மீள்விக்கப்பட்டது