பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய் பழத்தைச் செருகி இடையில் மல்லிகை இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை மடலை வைத்தாய் பச்சைக் கிளியே!” என்று நீளும், கவிதையின் பிற்பகுதியில், அவர் சிறையில் அடைக்கப்பட்டது பற்றிய அரசியலைப் பேசத் தொடங்கி விடுகிறார். - இது திராவிட இலக்கியபாணி. இந்த பாணியை வயலூர் சண்முகம் அடிக்கடிக் கையாள்வதை நாம் இவரது கவிதைகளில் காண முடிகிறது. திராவிட சிந்தனையும், மார்க்சிய சித்தாந்தமும் இவரது கவிதைகளின் உள்முகப்பயணத்தை மடைமாற்றம் செய்து, மெலிதாகப் பேசும் இவரது மெளனக் குரலை, இடிபோல் முழக்கும் ஒரு கலகக் குரலாக மாற்றிவிடுகின்றன. "மொட்டுகளை ஊதவரும் தென்றலாகவா இருக்கப்போகிறாய்? அதற்கு நேரமில்லை மலை உச்சிகளையும் புழுதிக் காடாக்கும் மூர்க்கச் சூறையாக அவதார மெடு' என்று பெருங்குரலெடுத்துப் பேசத் தொடங்கி விடுகிறார். இவரது கவிதைகளின் சிறப்புத்தன்மையாக விளங்கித்தோன்றி, இவரது படைப்புகளை அந்தக் காலகட்டத்து திராவிட இலக்கியங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் ஒரு முக்கியமான பண்புக்கூறு இவரது வித்தியாசமான, அதே நேரத்தில் ஆழமான படிமங்களின் தேர்வு.