பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் ஆனது?" என்று என்னை அதிசயக் கேள்வி கேட்டாய்! நானென்ன பதிலைச் சொல்வேன்? நகைத்திட்டேன்; திகைத்து நின்றேன்! குங்குமச் சிமிழின் மூடி, குண்டுசி, கூந்தல் நாடா, சிங்கத்துப் பொம்மை; சாவி, செருப்புத்தோல் பூக்கள் - எல்லாம் வங்காளப் பட்டுத் துண்டில் விளையாட அடுக்கி வைத்தாய்! தங்கமும் கல்லும் ஒன்றாய்த் தரம்போடும் ஞானி தோற்றான்! 'உயிரற்ற மரத்தின் பொம்மை உறுப்புகள் உடையும் போது துயருற்றே துடிக்கின்றாய் நீ! தொல்லைகள் வறுமை வாட்ட 'உயிர்பெற்ற மனிதப் பொம்மை உயிரையே உடைக்கும் போதும் செயலற்றே நிற்கும் மாந்தர் சிறுமையை என்ன சொல்வேன்?