பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 99 கண்ணாடி முன்னே நின்றேன்: கவலையின் இருட்டைக் கண்டேன்! பின்னாலே வந்த நீயோ பிடித்தென்னை நகர்த்தி விட்டே முன்னாலே நின்றாய்! அடடா! முற்றிலும் வெளிச்சம்! இன்பம்!! கண்ணாடி செய்யும் இந்தக் கள்ளத்தைக் குறும்பைப் பாரேன்! முக்கனி பிழிந்த சாறா? முதிர்ந்திடாத் தெங்கின் நீரா? மிக்கதோர் இசையில் வல்லான் மீட்டிடும் சொர்க்கப் பாட்டா? இக்கணக்கால் உன்றன் மழலை இனிமையை அளக்க லாமோ? திக்கெல்லாம் மணக்கும் என்றன் செந்தமிழ்ச் சொத்தே அதுதான்! Q