பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தெற்கு ஜன்னலும் நானும் வேலின் முகம் போல; - எரியும் விளக்கின் சுடர் போல; நீலச் சாந்தெடுத்தே -பொட்டு நெற்றியில் இட்டிருந்தேன்! முட்டை தெறித்தது போல் - பலா மூசை அறுத்தது போல், பொட்டும் சிதைந்ததென்ன? ... உன் பொன்னுடல் பதைப்பதென்ன? சித்திரக் கொடி போட்டப்-பழஞ் சேலையை உடுத்துவிட்டேன்! கொத்துப்பூ புதுப் புடவைப் - பெட்டிக் கொக்கி விட்டு வந்த தென்ன....? சந்தனச் சீப்பெடுத்தே - நெளியும் சர்ப்பம் போல் சடை முடித்தேன்! அந்தச் சடை பிரித்தே - நீ ஏன் அவசரமாய்க் கொண்டை யிட்டாய்...?