பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 101 வாசமிகு மல்லிகையை - குழலில் வனப்பாகச் சூட்டி வைத்தேன்! பேசாமல் மல்லிகைப்பூ - மொட்டாய்ப் பின்னுமிதோ ஆனதென்ன? அரைத்த மாவும் கரைக்க வில்லை! - அட அந்தி விளக்கேற்ற வில்லை! குரைத்த நாயின் வாயடக்கி - மேனி குலைந்திடவே ஓடி வந்தாய்! முல்லைப் பூங்கொடி கீழ் - விழுந்தே முள்ளதனில் கிடந்த தென்றாய்! நல்லபடி அதற்கொரு - கொம்பை நட்டு விட்டு வந்தே னென்றாய்! அப்போதொரு பெரும் பாம்பு - சீறி ஆடி வந்தே துர்த்திற் றென்றாய்! தெப்பலாக வியர்த்த தென்றாய்! - நெஞ்சுத் திடுக்கிட்டே போனேனென்றாய்! முல்லைக் கொடி நீயடியோ! - ஆனால், முள்ளதிலே படரலாமோ-? பொல்லாத பாம்ப துதான் - பருவம் பூவையர்க்கே, உண்மையடி! O