பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழி....! தெற்கு ஜன்னலும் நானும் கோயில்கள் ஆயிரம் உண்டென்பார்! கூடை கூடையாய்க் கதை படிப்பார்: ஆயினும் இறைவா, நீ வாழும் ஆலயம் என்பதும் ஒன்றேதான்! உண்ணவும் உடுக்கவும் கதியின்றி உறுத்தும் வறுமைப் பொதி சுமந்து: எண்ணம் அனைத்தும் உனைமொய்க்க இருப்பார் இதயமே உன் கோயில்! இன்னல் உற்றோர்; தாழ்ந்தவர்கள் இடறி விழுந்தோர் இருப்பிடமே, மின்னும் உன்றன் திருவடிகள் மேவிப் பதியும் திருப்பதியாம்! எத்துணைத் தாழ்வாய் நான் தினமும் இறைவா உன்னைப் பணிந்திடினும் அத்துணைப் பணிவும் தெரிகைகளும் அடவியில் சிந்திய நிலவன்றோ?