பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 103 உன்றன் திருவடித் தாமரைகள் உவந்தே மலரும் எளியோரை! என்றன் பணிவும் பிரார்த்தனையும் ஏனோ அண்டவும் முடியவில்லை எந்த ஏழைப் பாழையுடன் இறைவா நீயும் வருவாயோ அந்த எளியோர் நிழலதையும் அகந்தை யால் நான் அணுகேனே! அடைத்திடும் கதவே இல்லாத ஆலயம் இது வெனச் சொல்வது போல் நொடித் தோர் இதயக் கொலுவமர்ந்தாய் நுவலரும் அருளின் பேரிறைவா! ஆல் போல் கைகளால் அரவணைத்தே அடைக்கலம் தந்திடும் அருந்தோழர் கால்கள் ஓடிய நடந்திடினும் கனவிலும் உன்வழி காணேன், நான் O