பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தெற்கு ஜன்னலும் நானும் கருமுகிலின் படைதிரண்டே கண்ணறியா வானில் பெருகிவரும் முதுமழைக்குப் பேரிகைகள் தட்ட இளைத்திருந்த இளங்தென்றல் ஏறும் பெருங் காற்றாய் களைத்தறியா மறவன்எனக் கர்ஜனைகள் செய்ய கவ்வுகின்ற வறுமையதாய் காலமகள் புதிராய் எவ்வுகின்ற இவ்விரவில் எழுதுகிறேன் கவிதை கலைத்தறியா அரைத்துகிலும் கவமெனவே நீக்கி நிலைத்தசுகம்; நீண்டசுகம்; நிஜச்சுகமும் இதுவே! தொட்ட இடம்; பட்ட இடம்; தோன்றும் இடம் எல்லாம் கட்டுடலின் பட்டுடலின் காமசுக மதுவே!