பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மழை எனும் கவிதையில், வயலூர் சண்முகம் காட்டும் புதிய உவமைகளைப் பாருங்கள்:

'மழை பெய்து கொண்டிருக்கிறது வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் ஆற்றலற்ற மாணவனின் பரிட்சை பயங்களைப்போல் மழை பெய்து கொண்டிருக்கிறது மழை பெய்து கொண்டேயிருக்கிறது சதா அலைந்து திரியும் முட்டாள்களின் சந்தேகங்களைப் போல” என்று மழையைப் புதிய முறையில் கொண்டாடுகிறது Ba", கவிதை. ‘சகானா எனும் கவிதையில் 'அட்சதைகள் விழும் நேரம் இமையிலிருந்து உதிரும் உப்புப்பூக்களை உன் ஸ்வர விரல்களால் துடைக்கும் நீ அந்த மெளன விழிகளின் நிரந்தரத் தோழி' என்று பேசுகிறபோது, இவரது கவிதைகளில் கையாள்ப்படும் அலங்கார ஜாலங்கள் ஜொலிக்கும் மொழி, கவிதையின்