பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முட்கள் பயிரிடப்பட்ட ஒற்றையடிப்பாதையில் நடக்க மட்டுமல்ல நடனமாடவும் கற்றுக் கொண்டுவிட்டது என் இதயம். ஒரு செளந்தர்ய லாகிரியோடு என் கண்ணிர் கூட புன்னகைக்கத் தொடங்கி விட்டது இப்போதெல்லாம்'. என்று பேசுகிற இவரது கவிதைகள் சோகங்களை வாசகனுடன் பரிமாறிக் கொள்ளத் தயாராயிருக்கிற அதே நேரத்தில், நம்பிக்கையின் தீபத்தை அணையவிடாமல் காப்பவையாகவும் இருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்றைய கவிதை, தொழில்நுட்ப அறிவியல் கொண்டு வந்து திணித்த ஒரு தனிமைக்கு இரையாகிவிட்ட பின்னணியில் தனி மனித வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறதோ அதே அளவுக்கு, மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கான முக்கியத்துவத்தையும் உடன் பகிர்ந்து கொள்ளத்தயாராக இருக்கிற, வயலூர் சண்முகத்தின் கவிதைகள் நம்பிக்கையின் பிராணவாயுவை ஆகாயம் முழுவதும் நிறைத்து விடுகின்றன. அக உலகம் சார்ந்த அனுபவங்கள், புற உலகம் சார்ந்த விழுமியங்களால் பாதிக்கப்படுகிறபோது, வயலூர் சண்முகத்தின் மொழி வெளிப்பாடு ஒரு திடவடிவச் சிற்பம்ாக உருக்கொண்டு விடுகிறது. ஒரு மரத்தின் உயரம் அது விழுந்துவிட்ட பிறகுதான் தெரிய வருகிறது என்கிற பழமொழியின் உண்மையான அர்த்தத்தை கவிஞர் வயலூர் சண்முகம்