பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயகி நீழலில் மின்னல் விதைகள்! சுவாமி ஜீவன் ப்ரமோத் எழுபதுகளின் தொடக்க ஆண்டுகளில் கவிஞர் செம்மல் என்ற புனைபெயரில் அறியப்பட்ட வயலூர் சண்முகத்தோடு நான் பழக நேர்ந்தது. என் ஆன்ம விதை, அனுபவவளங்கள் தேடி அலைந்த காலம் அது. எஸ்.எஸ்.எல். சி தேர்வு அப்போதுதான் முடிந்திருந்தது. கல்விச்சூழல், குடும்ப உறவுகள், நல்ல நண்பர்கள், கலைநயம் மிக்க கோயில்கள், அங்கு வளர்க்கப்பட்ட பக்திப்பார்வை என்று காரைக்கால் ஒரு பக்குவமான வயலாக திகழ்ந்தது. என் ஆன்மவிதை அங்குதான் வேர்பரப்பி வளர்ந்தது. பூக்கவும் காய்க்கவும் நான் தாகம் கொண்டு அலைந்த ஆண்டுகள் எழுபதுகள். அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல் ரியின் நூலகத்தில் தமிழ் நூற்கள் பகுதியை பசித்த பசு போல மனதார மேய்ந்து கொண்டிருந்தேன். இடைஇடையே வாழ்வு பற்றியும் - உலகம் பற்றியும் நூறுநூறு கேள்விகள் எழும். சோர்வும், சலிப்பும், உற்சாகமும் மேதமைப் போதையுமாய் மாதங்கள் வளரும். அந்தக் காலங்களில்தான் வயலூர் சண்முகத்தோடு நான் பழக நேர்ந்தது. - அது 1973 ஆம் வருடம், ஒரு மரத்தில், புத்தம் புதுமலர்கள் பூத்த கிளை ஒன்று காற்றின் கோரத்தால் திடீரென