பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறிக்கப்பட்டதுபோல என் அப்பா மரணமுற்றார். சில வாரங்கள் என்னால் கல்லூரிக்குச் செல்ல இயலவில்லை. கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒரு சேர்க்கை மனுத்தாளில் என் அப்பாவின் கையெழுத்து தேவைப்பட்டது. மரணம் என் தந்தையை எட்டிய சில தினங்களுகு முன், அவர் என்னோடு மகிழ்வாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு வேளையில் அவரிடம் கையெழுத்து வேண்டினேன். அதுமட்டுமல்லாமல் அவருக்கும், எனக்கும், சமுதாய அமைப்புக்கும் இடையே தி.சு. பாலகிருஷ்ணப்பிள்ளை என்ற பெயரால் வளர்ந்து கொண்டிருந்த சாதிப் பிரச்னையை எடுத்து சந்தியில் நிறுத்தியதும் அப்போதுதான். “என் திருப்பூர்த் தாத்தா சுப்ரமணியம் உங்களுக்கு பாலகிருஷ்ணன்னுதானே பேர் வச்சாங்க 'பிள்ளையை கையெழுத்திலே எப்போதிலிருந்து சேர்த்துக்கிட்டீங்க?' என்று அப்பாவிடம் நான் கேட்ட ஒரு கேள்வியால் அவருக்குள் பல கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். கடைசியாய் என் கல்லூரி சேர்க்கை மனுத்தாளில் அவர் கையெழுத்துப் போட்டு நான் பார்த்தது. தி.சு.பாலகிருஷ்ணன் என்று மட்டும்தான். அப்பா மறைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆன நிலையில் ஒரு சனிக்கிழமை மாலையில் கவிஞர் செம்மலிடமிருந்து ஒரு கடிதக்குறிப்பு வந்திருந்தது. 'நாளை காலை - அல்லது உங்களுக்கு வாய்ப்புள்ள போது கீழ்கண்ட முகவரியில், எனது இல்லத்தில் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இப்படிக்கு செம்மல் 53, நாயகி நிழல்' வடக்குத் தெரு தளத்தெரு காரைக்கால்