பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா அடிக்கடி சொல்வார் ‘என்னை - என் எழுத்தை தமிழகம் புரிந்து கொள்ள இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் என்று. அதுதான் நடந்திருக்கிறது. இது யூகமா? தீர்க்க தரிசனமா? தெரியவில்லை. * அப்பாவின் பிறப்பு வளர்ப்பு பற்றியும், குணாதிசயம், கொள்கைகள் பற்றியும், கரடுமுரடான அவருடைய வாழ்வுப் பயணம் பற்றியும் ஒரு நாவல் எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருக்கிறது. அவரைப் பற்றி சுருக்கமாய் எழுதுவதென்பது இயலாது. இந்தச் சூழலில் சில பகிர்வுகள். இந்த நூலின் மரபுக் கவிதைகள்' எனத் தலைப்பிட்ட இரண்டாம் பகுதிக்கு திரு. இந்திரன் அவர்களின் அணிந்துரை பொருந்தாது. முன் பகுதியில் உள்ள புதுக் கவிதைகளை மட்டும் படித்தே அவர் அணிந்துரை எழுதித் தந்தார். அவருக்கு என் நன்றிகள். இந்த நூலில் உள்ள அப்பாவின் மரபுக் கவிதைகள் எழுதப்பட்ட காலம் ஐம்பது மற்றும் அறுபதுகள் ஆகும். பிரசண்ட விகடன், கண்ணன், திராவிட நாடு, கலைக்கதிர், விஜயா, பால்யன், அறப்போர், தமிழ் சினிமா போன்ற இதழ்களில் பிரசுரமானவை. இக்கவிதைகளை இன்று வரை பாதுகாப்பாக நான் சுமந்துவர ஏதுவாக, அன்றே திருவாரூர் வனமாலி அச்சகம் வழியாக தட்டச்சு செய்து கட்டமைப்பு செய்து தந்த என் மாமா புதுப்பத்தூர் திரு. பி.எஸ்.டி. தட்சிணாமூர்த்தி அவர்களை இங்கே நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மிகுந்த முனைப்புடன் இக்கவிதைகளை அழகிய நூலாக்கம் செய்து வெளியிடும் நண்பர் நாதன் அவர்களுக்கு இதய நன்றிகள். அப்பாவைப் பற்றிய நினைவுகளை இயல்பாய் பகிர்ந்து கொண்டிருக்கும்