பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 25 குக்கூ... குக்கூ... குக்கூ.... குயிலே - இது அழுகையா? அழைப்பா? ஆனிப்புழுதியால் சூரியன் கண்கசக்க தென்றலடிப்பு மெலிந்துவிட்டதே - அதற்காக அழுகிறாயா? இல்லை காவிவெள்ள காவிரி நுரைகளில் ஆடிக்களிக்கப் போகும் ஆடியை வரவேற்று அழைக்கிறாயா? குக்கூ... குக்கூ.... கழனி விரிப்புகளில் கலப்பைகள் உழுகின்றன.