பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் அப்படித்தான் தென்படுகிறது எனக்கு. வாழ்வுக்கு அப்பால் மரணத்தின் சாஸ்வத வெற்றிடத்தில் நீ வசிக்கிறாயோ? இல்லை அதுவே உனது சாம்ராஜ்யமா? மயிலிறகை விட மென்மையாய் இருக்கும் உன் மேன்மையான கைகளால் என் இதயத்தை கொஞ்சம் வருடுகிறாயா அமைதியே? 馨