பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் வண்ணப் பூக்களே! உங்கள் வாசனைச் சிரிப்பை எனக்கும் தருவீர்களா? அந்த நுகர்ச்சிக்குத்தான் என் நாசி ஆசைப்படுகிறது. சிட்டுக் குருவிகளே! எனக்கும் சில சிறகுகள் தர முடியுமா? அந்த எல்லையில்லா சுதந்திரத்துக்குத்தான் என் ஆன்மா ஏங்கித் தவிக்கிறது. 馨