பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தெற்கு ஜன்னலும் நானும் தோற்றுவிடுவதும் ஊமை முரசுகள் சில சமயம் வென்று விடுவதும் அவளுக்கெங்கே தெரியப் போகிறதது? மெளனத்தின் சாதனைகள் மகத்தானவை ஆயிற்றே! மழை பெய்து கொண்டே இருக்கிறது சதா அலைந்து திரியும் முட்டாள்களின் சந்தேகங்களைப் போல. தொடர்ந்து விடியும் வறுமை மிக்க ஏழைகளின் * காலைகளைப் போல. பசியெடுத்து பாலுக்கழும் குழந்தையைப் போல மழை பெய்துகொண்டே இருக்கிறது இன்னும். O