பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை - ഖുചേട്ടേ ഖണ്മ ஆகிறது சிலருடைய படைப்பு. வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது சிலரது படைப்பு. வெளியே தெரியாத வேர்களாகவே புதைந்து கிடக்கிறது பல முகமறியா எழுத்தாளர்களின் எழுத்து. இதில் கடைசி வகையானதுதான் கவிஞர் வயலூர் சண்முகத்தின் எழுத்துக்கள். காலமான ஒரு கவிஞருடைய, காலம் மீறிய கவிதைகளை, காலம் கடந்தேனும் நூலாக்க கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ச்சியடைகிறேன். விமர்சகர் இந்திரன், சுவாமி ஜீவன் ப்ரமோத் இருவரும் வயலூர் சண்முகம் அவர்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படிக்கும்போது இப்படிப்பட்ட ஒரு படைப்பாளி, தான் வாழும் காலத்தில் வெளியே தெரியவில்லையே என்ற ஆதங்கம் நமக்கு ஏற்படுகிறது. ‘என்னைவிட ஆற்றல் உள்ளவர் வயலூர் சண்முகம். தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு புது வீச்சு உள்ள கவிஞன் கிடையாது அன்னைக்கு!’ என்று வயலூர் சண்முகம் அவர்களைப் பற்றி உவமைக் கவிஞர் சுரதா சொல்லியதாக நண்பர் மானாபாஸ்கரன் சொல்லக் கேட்டதை எண்ணும்போது காலம் கடந்தேனும் அந்தக் கவிஞனின் கருத்துப் பெட்டகம் நூலாக வருகிறதே என்று பெருமிதம் என்னுள் எழுகிறது. நாதன்