பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தெற்கு ஜன்னலும் நானும் இப்போதெல்லாம். இப்போதெல்லாம் எனது உதயங்கள் எனது அஸ்தமனங்களைப் பார்த்து ஆயாசப்படுவதில்லை. பரவசமே கொள்கின்றன. முட்கள் பயிரிடப்பட்ட ஒற்றையடிப் பாதையில் நடக்கமட்டுமல்லநடனமாடவும் கற்றுக் கொண்டு விட்டது என் இதயம். ஒரு செளந்தர்ய லாகிரியோடு என் கண்ணி கூட புன்னகைக்கத் தொடங்கிவிட்டது இப்போதெல்லாம். C