பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 77 மரபுக் கவிதைகள் Q சங்ககால இலக்கியங்களையும் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவைகளையும் படிக்க உங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது எது? இலக்கியத் துறையில் என் திறனை வளர்த்துக் கொள்ள் துணைநின்றவை அண்ணாவின் எழுத்தோவியங்களும், புரட்சிக் கவிஞரின் கவிதைகளும் என்பதை மறக்க முடியாது. கவிஞர் சுரதா, கவிஞர் மாவெண்கோ(வயலூர் சண்முகம்) கவிஞர் கா.மு. ஷெரீப் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் மாணவப் பருவத்து சூழ்நிலையும் உந்து சக்தியாக இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது! கலைஞர் மு. கருணாநிதி (கலைஞர் முதல் கலாப்ரியா வரை - கோமல் சுவாமிநாதன் - இளையபாரதி ஆகியோர் தொகுத்த சுபமங்களா நேர்காணல்கள் திரட்டு நூலில். முதற் பதிப்பு 1997)