பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 79 தரிசை பாழை முத்தமிட்டே தாவர சொர்க்கம் ஆக்குகிறாய்! பரிசு; உரிமை கேட்பதில்லை; பசியோ துயரோ காட்டவில்லை! நீல முகிலாம் வள்ளலவன் நினக்கே வழங்கும் பிரசாதம் - கால முழுதும் உயிர்காக்கும் “காவிரி ரூப தண்புனலே! சத்தியம்; நீதி கரைகளுக்குள் தர்மமே நீயாய்ப் பிறந்ததுபோல் நித்தமும் பொங்கிப் புரள்கின்றாய்! நின்னில் நெடுந்தவம் நடக்குதம்மா! O