பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 81 அளி எனும் வண்டின் மேனி அழகுக்கே இரவல் போவாய்! கிளிஎனும் கன்னி கூடக் கிழவிபோல் அஞ்சி, வயிற்றில் புளியினைக் கரைக்கும் பேய்கள் புரளியைக் கூற நீதான் எளிதிலே உதவுகின்றாய்! இதிலென்ன உனக்கு லாபம்? நிலவினில், அசதி யாலே நித்திரைச் சுகத்தைத் தேடும் 'உலகத்தைக் காவல் செய்யும் உத்தியோகம் உன்னைச் சேரத் தொலைவினில் கோபு ரத்தின் தோள்களில்; நிசிம ணிக்கும் மலர்களின் உதட்டில் எல்லாம் மருவியே துணையிருப்பாய்! தொழுகின்றோர் பக்திக் கரங்கள் தொடுக்கின்ற மாலை வீணை பழகிடுமோர் நங்கை ஏரிப் படகதன் தூக்கம், தேம்பி அழுகின்றோர் கண்ணித் துளிகள் அத்தனையும் சித்த ரிப்போர் 'நிழல்”எனும் உன்னையேதான் நெஞ்சிலே தேனாய்க் குடிப்பார்: