பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 83 கொடுக்குயர்த்தும் தேளின் நிழலில் கொடுவிஷம் உண்டா? நேசம் கெடுக்கின்ற பாவி நிழலில் கீழ்ப்புத்தி உண்டா? கிளையை வெடு'கென்றே முறிக்கும் குரங்கின் . விஷமந்தான் நிழலில் உண்டா? தடுக்கிவீழ் பெண்ணின் நிழலில் தப்புண்டா? நீயே சொல்வாய்! நெளிவுக்கும்; குறுகலுக்கும்; நேரற்ற கோண லுக்கும் ஒளிவாழ்வில் இடமே இல்லை! உனக்கவையே வாழ்வாம் அன்றோ? வெளிச்சத்தின் கறையே! நிழலே! வெம்மையே சூழ்ந்த போதும் குளிர்ச்சியே தருவாய் நீயே குடைக்குள்வாழ் தருமம் ஆகும்! O