பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 85 ஆற்றுநீர் ஏழை யைப்போல் அங்கங்கே ஒண்டி ஓடும்! ஊற்றுநீர் மேலெழுந்தே ஊர்க்குடத்தில் கங்கை யாகும்! காற்றுக்கும் கோபம் இல்லை! கலைகளுக்கோ தூக்கம் இல்லை! ஏற்றுகின்ற திருவி ளக்கோ இல்லத்தின் களிப்பைப் பேசும்! உதயங்கள் கனவுச் சுளையின் ருசியோடே வந்து கொஞ்சும்! இதயங்கள் ஓவியத்தின் ரேகையில் மினுமி னுக்கும்! விதிகிறுக்கும் வாழ்வுக் கோல விளையாட்டோ நிழலின் மெத்தை! பதியன்களாய் நினைவுகள்! பருவப் பளபளப்பே வஸந்தமே வா! வா!! Q