பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புழு ஒன்று உடல் சுவடு பதித்து ஊர்ந்து கொண்டிருந்தது.... அது நெறிந்து வளைந்த மண் சுவட்டின் வடிவம் தமிழின் டகரம்’ என்று புழு ஒன்று ஈரமண்ணில் பதித்த சுவடு தமிழின் ‘ட’ கரம்போல் இருப்பதை நுண்மையாகக் கவனிக்கிறார். இதனைத் தொடர்ந்து கவிஞரின் சமூகம் பற்றிய அக்கறை தலை தூக்கிவிடுகிறது. அவர் தொடர்ந்து பேசுகிறார். “அற்பப் புழுகூட எழுத்தறிவு பெற்றுவிட்டதோ?” என்ற அவரது வினாவைத் தொடர்ந்து நமது வாக்காளர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற தமிழகத்தின் ஒளிமிகுந்த எதிர்காலம் பற்றிய ஒரு கனவில் புகுந்து விடுகிறார். இப்படி இயற்கையை நுட்பமாகக் கவனிக்கிற கவிதைகளின் பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதியில் , சமூகம் குறித்த முற்போக்குக் கருத்துக்களை அவற்றின் மீது தற்குறிப்பாக ஏற்றிவிடுகிற ஒருபாணி திராவிட சிந்தனையினால் பாதிக்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் தொட்டு இன்றைய கலைஞர் கருணாநிதி வரை திராவிட சிந்தனை சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாட்டில் நாம் காண முடியும். - - கலைஞரின் "பச்சைக்கிளி" எனும் கவிதை ஒன்றில்,