பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தெற்கு ஜன்னலும் நானும் 'ஏதோ பேசி மழுப்புகிறாய்! என்னைப் புரிந்தும் குழப்புகிறாய்! தீதே விளைத்திடும் வளர்ச்சியினைத் தெரிந்தே தேடிச் செல்கின்றாய்! வளர்ந்து வளர்ந்தே தேய்கின்றாய்! வளர்வதால் அன்றோ தேய்கின்றாய்!! 'களங்கம் உனக்கு வருவதுவும் கணக்காய் நீயே வளர்வதால் தான்! ஆற்றைக் கடக்கும் படகே போல்ஆரஞ்சுப் பழத்தின் சுளையே போல் - ஏற்றே ஆடும் பந்தே போல், ஏனோ வடிவை மாற்றுகிறாய்?: “வளரும் எதற்கும் கறையுண்டு! வாழும் எதற்கும் குறையுண்டு! வளரும் போதும் வாழ்கின்றேன்! மாறும் போதும் வாழ்கின்றேன்! மிதக்கும் படகின் அமைதியினை, மேவும் சுளையின் ஒட்டுறவை; குதிக்கும் பந்தின் விசைத்திறனைக் கொண்டால் வாழ்வே வெற்றியடா!" 'நன்று! நன்று! குளிர் மதியே! நயமாய்ச் சொன்னாய் புது மதியை! குன்றிக் குறைந்தே தேய்வதுவும் கொள் புது வாழ்வின் வாய்ப்புக்கே!" O