பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 89 ஒண்டிக்குயில்! ஒண்டிக் குயிலொன்று கூவுகிறது! - தினமும் ஊமை இருளுக்குள்ளே கேவுகிறது! அண்டி அணைத்திடவோ நாதியின்றி - தன்னுள் அழுத கண்ணிலும் மீதியின்றி ஒண்டிக் குயிலெரன்று கூவுகிறது! வசந்தப் பூஞ்சோலை நிழலுமில்லை! - சிறிதும் வான நிலவுகளைத் தழுவவில்லை! கசந்த கனவுகளை வர்ணமிட்டே - தனது காலடிப் பாதையில் சொர்ணமிட்டே, ஒண்டிக் குயிலொன்று கூவுகிறது! பாமர சமூகத்தின் வழக்குரைக்கும் மேட்டு பணக்குலத் தொப்பைகளின் சழக்கறுக்கும்! காமறு சத்தியத்தைத் துணைக்கழைத்தே -தெய்வ கருணையாம் நித்தியத்தை இணைத்திழுத்தே ஒண்டிக் குயிலொன்று கூவுகிறது! நொண்டி நொடிக்குமொரு மனம் நுழையும் வீர நோக்கு நடைபடைக்கக் கனல்துவும்! சண்டிக் கழுதைகளைச் சாடிடவும், தர்மச் சாத்திரப் பழுதுகளை மூடிடவும், ஒண்டிக் குயிலொன்று கூவுகிறது! O