பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கவிபாடு தெற்கு ஜன்னலும் நானும் ஆசைக் கண்மணியே! அன்புத் திருவிளக்கே! வாசப் புதுமலர்கள் மணமவிழ்க்கும் சோலையிலே வீசும் இளங்காற்றே! வீரக் கவிபாடு! பேசுமென் புகழெல்லாம் பெருங்குரலில் கவிபாடு! முச்சங்கம் அழிந்தாலும் மூவேந்தர் மறைந்தாலும் இச்சகத்தை யானாலும் எத்திறனும் அழியாதே! கச்சை வரிந்துகட்டிக் கார்க்குரலில் கவிபாடு! நச்சுதோய் வேல்நிகர்த்த நற்சொல்லால் கவிபாடு: என்மகுட மணியொளியை இன்றிழந்துத் தவிக்குமொரு துன்பத்தைக் காண்பதனால் துடிதுடிக்கும் உன்நெஞ்ச