பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 93 அன்பொன்றே போதுமடா! ஆயுதத்தின் வரிசையெலாம் என்செய்யும் இளைஞன்நீ எழுப்புகின்ற கவிப்படைமுன்? தாய்ப்பற்று மொழிப்பற்றுத் தாயகத்துத் தனிப்பற்று வாய்ப்பற்றுப் போகாமல் வாய்திறந்தே கவிபாடு! காய்பற்றிக் கனிவெறுக்கும் கசடுகளும் துள்ளியெழத், தீப்பற்றும் காற்றாகத் தீந்தமிழில் கவிபாடு! முடிதுக்கும் வேந்தரெல்லாம் முன்னாளில் என்றன்இரு அடிதூக்கித் தொழுமாறு அரசுகொலு வீற்றிருந்தேன்! படிதுக்கும் புகழ்சுமந்தே பாராள வந்தவள்நான்! கொடிதுக்கிக் கவிபாடு! கோலுயரக் கவிபாடு! மானழுதால் மகிழ்கின்ற வரிப்புலிபோல் பொழுதனைத்தும் நானழுதால் நலமென்று நகைசிந்திப் பார்த்திருக்கும்