பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் காலம் என்னும் பழிகாரன் கையில் சிக்கி அழிந்தாலும் கல்லும் முள்ளும் இடரிடினும் - வெங் கனலில் புனலில் நடக்கின்றேன்! ஒலம் எல்லாம் யாழ்ப்பாட்டாய் ஊமைக் கனவும் வாழ்வாக ஒண்டியாய்) ஓரியாய் நடக்கின்றேன்! - என் உள்ளும் புற்மும் நடக்கின்றேன் அசையா உதட்டில் சுதியெழுப்பும் ஆடாக் கால்களில் சதிரெழுப்பும் ஆத்மக் காதலி கரம்தழுவப் - பெரும் ஆச்ை மோத விரைகின்றேன்! இசைவோ, முறிவோ எதுவரினும் ஏற்றுப் போற்றுக் குதூகலிக்க இரவும் பகலும் நடக்கின்றேன்! - நான் எட்டித், தாவி நடக்கின்றேன்! C