பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9


குழுவின் இரு அணிகளும் மோதின. ஒரு அணிக்கு முரளி கேப்டன். மற்றொரு அணிக்கு சேகர் கேப்டன். பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் ஆர்வமுள்ள பெற்றோர்களும் மைதானத்தைச் சுற்றிலும் குழுமியிருந்தனர். முரளியின் வெற்றியை எதிர்நோக்கியவராக அவன் மாமா கழுகு போல் விளையாட்டைக் கூர்ந்து கவனித்து, கொண் டிருந்தார்.

முரளி அணியினர் மிகுந்த துடிப்புடன் விளையாடத் தொடங்கினர். ஆனால், போகப் போக சேகர் அணியின் கையே ஓங்கிக் கொண் டிருந்தது. முதலாவது கோலை சேகர் போட்டான். குழுமியிருந்தோர் அனைவரும் ஆரவார ஒலியோடு கைதட்டி உற்சாகமூட்டினர்.

இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. பந்தை லாவகமாகவும் தந்திரமாகவும் போக்குக் காட்டி நகர்த்திக் கொண்டிருந்தனர் சேகர் அணியினர். மீண்டும் மீண்டும் கைதட்டல்களும் உற்சாக ஒலிகளும் பார்வையாளர் பகுதியிலிருந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இதைச் சிறிதும் பொருட்படுத்தாதவன்போல் சேகர் சுறுசுறுப்பாகவும் விதிமுறையோடும் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஆனால், முரளியின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டது. ‘இம்முறையும் சேகர் கோல்