பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10


போட்டுவிட்டால்’ நினைக்கும்போதே முரளியின் நெஞ்சு படபடத்தது. அத்தோல்வியைத் தன்னால் தாங்க முடியாது என உறுதியாக நம்பினான். அது வரை முறையாக ஆடி வந்த முரளி எப்படியாவது பந்து தன் பகுதி கோலை நோக்கிப் போகாமல் தடுக்க தாறுமாறாக ஒடித் தடுக்கலானான். இதைக் கண்ட பார்வையாளர்கள் கூச்சலிட்டு ஆட்சேபிக்கத் தொடங்கினர். இது மேலும் முரளிக்கு எரிச்சலூட்டியது.

முரளியின் ஆட்டப் போக்கு அவன் மாமாவுக்குப் பிடிக்கவில்லை. அவனை நன்றாகத் தெரிந்தவர் ஆதலால் அடுத்து என்ன நடக்கு மோ என்ற கவலையுடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

பார்வையாளர் பகுதியிலிருந்து வந்த எதிர்ப்புக் குரல்கள் முரளியை மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டின. அவனுள் உறங்கிக் கொண்டிருந்த முரட்டுத்தனம் தலைதூக்கியது. அவன் மனதில் மட்டுமல்ல; ஆட்டத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது.

அதே சமயம் சேகர் பொறுமையாகவும் முறையாகவும் விதிமுறை பிறழாமல் விளையாடிக் கொண்டிருந்தான். லாவகமாக அவன் காலுக்குப் பந்து கிடைத்தது. அவன் சாதுரியமாகப் பந்தை கோலை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்