பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7


சேகரின் மனத் தவிப்பை மற்றவர்கள் பொருட்படுத்தாவிட்டாலும் மாமாவால் அவ்வாறு இருக்க அவர் மனம் இடம் தரவில்லை. கவலைச் சூழலிலும் சேகரைக் கனிவாக நோக்கினார். அது அவனுக்குச் சற்று ஆறுதலாகவே இருந்தது.

முரளியின் கால் உடைந்ததற்கு நிச்சயம் சேகர் காரணமில்லை என்பது மாமாவுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அந்தச் சம்பவம் நடக்கும் போது உன்னிப்பாகக் கவனித்தவர்களில் அவரும் ஒருவர்.

முரளியின் மாமா அவன் மீது அளவு கடந்த அன்பு காட்டியவர். படிப்பில் ஒகோ என்று இல்லாவிட்டாலும் நல்ல விளையாட்டு வீரனாக விளங்கியது அவருக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது. அதற்கு அவனுக்கு வாய்த்திருந்த நல்ல உடல்கட்டும் ஒரு காரணமாகும்.

முரளி விளையாட்டில் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதில் அவனைவிட ஆர்வம் உடையவராக இருந்தார் இதற்காக அவன் விரும்பிக் கேட்ட விளையாட்டுக் கருவிகளையெல்லாம் வாங்கிக் கொடுத்திருந்தார். விளையாட்டைப் பொருத்தவரை முரளியிடமிருந்த ஒரு கெட்ட பழக்கத்தை மட்டும் அவர் அறவே வெறுத்தார். அதுதான்