பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8


அவன் விளையாட்டில் தோற்போம் என்று தெரிந்தால் எதிரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து, குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்வது. இதைப்பற்றி மாமா எத்தனையோ தடவை எடுத்துக் கூறியும் எச்சரித்தும் பயன் இல்லை. அவன் கடைப்பிடித்த அந்த முரட்டுத்தனம் தான் இன்றைக்கு முரளியை ஆபரேசன் தியேட்டர் வரை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

அங்கு நிசப்தம் நிலவியது. சேகரின் மனம் மீண்டும் ஒரு முறை அந்தச் சம்பவத்தை அசை போடத் தொடங்கியது.

***

பள்ளியின் பல்வேறு விளையாட்டுகளில் முரளி பங்கேற்றாலும், பள்ளி கால்பந்துக் குழுவின் `கேப்டன்’ என்ற பெருமையைத் தான் அதிகம் விரும்பினான். இது சேகருக்கும் தெரிந்தது தான்.

சேகர் வேறொரு பள்ளியின் கால்பந்துக் குழுவின் கேப்டன். பல போட்டிகளில் முரளியுடன் விளையாடிய அனுபவம் உண்டு.

வழக்கம்போல ‘சுதந்திர தின’ விளை யாட்டுப் போட்டிகள் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் தொடங்கின. அன்று காலையில் இறுதியாகத் தேர்வு பெற்ற கால்பந்தாட்டக்