பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாட்சி 15 என்ருல், நேற்று வாங்கி வந்தவற்றுள் மிச்சம் உளது என் பாள்; பின்னவளோ, த்ன் கணவன் இன்றைக்கு என்ன வேண்டும் என்ருல், நேற்று வாங்கி வந்தவை போதவில்ல்ை, இன்றைக்கு இன்னும் நிறைய வாங்கிவர வேண்டுமெனக் கட்டளையிடுவாள். மேலும், இருப்பதைக் கொண்டு கணவன் முதலியோரை இன்புறுத்தித் தானும் இன்புறுவாள் முன் ன்வள்; எல்லாம் இருப்பினும், ஒரு விழுங்கு வெந்நீருக்கு வழியின்றித் திண்டாடித் த.விக்கவிடுவாள் பின்னவள்.வேறு துறைகளிலும் இவ்விதமே, இவ்விதமே! ஆவது முன்னவ ளால்; அழிவது பின்னவளால். இதேைலயே, முன்னவள் வீடு எல்லாம் உடையதாகவும், பின்னவள் வீடு. ஒன்றும் இல்லாததாகவும் வள்ளுவால் உாைக்கப்பட்டன. இக் குற்ட் கருத்தே, இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை என்னும் ஒளவையின் மொழிக்குச் செவ்வி யளிக்கின்றது. இங்கே, திருவள்ளுவரின் மனைவியார், இளை யான்குடி மாறரின் மனைவியார் போன்ற நற்பெண்டிரின் வரலாறுகள் நமக்குப் போதிய சான்று பகரும். மாண்பு அற்ற பத்து மாட்டுக்காரி, மாண்பு பெற்ற ஒரு மாட்டுக் காரியிடம் பால் வாங்கிய கதை பலரும் அறிந்ததே 4. சோர்விலாள் பெண் (தெளிவுரை) தன்னையும் காத்துக்கொண்டு, தன் கண வனையும் போற்றி, புகழ்ச்சொல்லை நிலைநிறுத்தி, என்றும் சோர்வுபடா திருப்பவளே பெண்ணுவாள். -- " தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் ' * . . (பதவுரை) தற்காத்து = (ஒழுக்கம், உடல் நலம் முதலியவற்ருல்) தன்னையும் காப்பாற்றிக்கொண்டு கற். கொண்டான் பேணி=தன்னே மணந்துகொண்ட கணவனே யும் உணவு முதலியவற்ருல் காத்துப் போற்றி, தகைச்ான்ற சொல் காத்து=தகுதி நிறைந்த புகழ்மொழியினையும் காத்து நிலைநிறுத்தி, சோர்விலாள் பெண் = (இவற்றிலும் வேறு எந்தக் காரியத்திலும்) என்றும் சோர்வு கொள்ளா தவளே சிறந்த பெண்ணுவாள். (தற்கொண்ட்ர்ன் =