பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறத்துப்பால் கணவன்; பேணுதல்=உபசரித்தல்-காத்தல், தகைசான்ற சொல்=புகழ் மொழிகள்) (மணக்குட்வருாை) தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி, நன்மை யமைந்த புகழ்களே யும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண் ணென்று சொல்லப்படுவள். - (பரிமேலழகருரை) கற்பினின்றும் வழுவாமற்றன்னேக் காத்துத் தன்னைக் கொண்டவனேயும் உண்டி முதலிய வற்ருற் பேணி, இருவர் மாட்டும் நன்மை யமைந்த புகழ் நீங்காமற் காத்து, மேற்சொல்லிய நற்குண நற்செய்கை களினுங் கடைப்பிடி யுடையாளே பெண்ணுவாள். (விளக்கவுஆ) முன்னர், இல்வாழ்க்கை என்னும் பகுதி யின் முதற் குறன்ரில், இயல்புடைய மூவர்க்கும் என்பதற்கு இயல்பான உரிமையுடைய பெற்ருேர், மனைவி, மக்கள் என்னும் மூவகையார்க்கும், எனப் பொருள் எழுதினேன் நான். பின்னர், மூன்ருவதான 'தென்புலத்தார்’ என்னும் குறளில், தான் என்பதற்குக் கணவன் (குடும்பத்தலைவன்) எனப்பொருள் உரைத்தேன். தான் என்பதிலேயே தன்னைச் சேர்ந்த மனைவி அடங்கிவிட மாட்டாளா? இயல் புடைய மூவர்' என்பதற்குள் அவளை அடக்க வேண்டுமா? அ து பொருந்தாது, எ ன எ ன் னே மறுத்து நகையாடினர் சிலர். இங்கே இந்தக் குறளைக் கூர்ந்து நோக்கவேண்டுகிறேன் தன்னைக் காப்பதோடு தன் கணவனையும் காப்பது மனைவியின் கடமை எனத் தனித் தனியே பிரித்து இங்கே கூறியிருப் பது போலவே, அங்கேயும், தன்னைக் காப்பதோடு தன் மனே வியையும் காப்பது கணவன் கடமை என்னும் கருத்,ை உட்கொண்டு, இயல்புடைய மூவர்' என்பதில் மனைவியை அடக்கி ஆசிரியர் கூறியிருக்கலாமல்லவா? மூவருள் மனேவி, போக, எனைய பெற்ருேரும் மக்களும் உதவிக் கொள்வரிை 'மக்கட்பேறு என்னும் அடுத்த பகுதியில் ஆசிரியர் அமைத்து வைத்துள்ள அழகினே ஆண்டறிந்து மகிழ்க! தொடர்ச்சி பதினேராவது பகுதியில்.... சங்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை.