6 பொருட்பால் மக்களுக்கு, கற்றனைத்து=கற்ற நூல்களின்-காலத்தின் அளவுக்கு ஏற்ப, அறிவு ஊறும்=அறிவுத்துறை வளரும். (தொடுதல்-தோண்டுதல், மாந்தர்=மக்கள்; அனைத்து= அந்த அளவு.) (மணக்குடவருரை) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண் டாம்; அதுபோல, மாந்தர்க்குக்கற்ற அளவும் அறிவுண்டாம். (பரிமேலழகருரை) மணலின்கட் கேணி தோண்டிய வளவிற் ருக வூறும்; அதுபோல, மக்கட் கறிவு கற்ற வளவிற்ருக ஆறும். (ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள் பல உள்ளன. இக்காலக் கல்வி நெறியாளர்கள், முற்காலக்கல்வி நெறியாளரின் கல்விக் கொள்கையை மறுத்து நகையாடுகின்றனர். “மாணுக்கர்கள் ஒன்றும் அறியாதவர்கள்-ஒர் ஆற்றலும் இல்லாதவர்கள்; அவர்களின் மனம் வெற்றிடம்; அம்மனத்தில் ஆசிரியர் பலவற்றைப் புதிதாகப் புகுத்துகிருர் நம்மிடம் இல்லாத பொருளை நாம் கடைக்குச் சென்று வாங்கி வருவதைப் போல, மானுக்கர்கள் தம்மிடம் இல்லாத பொருளைப் பள் ளிக்கூடம் சென்று பெற்று வருகிருர்கள்" என்றெல்லாம் பழைய காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். இக் காலத்திலும் இவ்வாறு எண்ணுபவர் உளால்லவா? ஆனல், இக்காலக் கல்வித்துறை உள நூல் (Educational Psychology) கூறுவ தென்ன? " மாணவன் மனம் இயல் பாகவே பல ஆற்றல்களையுடையது; அவ்வாற்றல்கள் அடங்கியுள்ளன; அவற்றுக்குத் தக்க வாய்ப்புக்கள் கொடுத்து வெளிப்படுத்தி நல்ல முறையில் வளர்த்து, சூழ் நிலைக்கு ஏற்பப் பொருந்தி வாழ மாணவனைப் பயிற்றுவது தான் ஆசிரியர் வேலை-பள்ளிக்கூடத்தில் செய்ய வேண்டிய பணி” என்றெல்லாம் இக்காலக் கல்விக் கொள்கை பறை சாற்றப்படுகிறது. சரி கல்லது இக்காலக் கல்விக் கொள்கை வாழ்க! ஆல்ை, இங்கே நான் சொல்லவிரும்புவது என்ன வெனில், பழைய பத்தாம் பசலிக் கொள்கையை மற்ற வர்போல் தாமும் நம்பியிராமல், இக்காலக் கல்விக் கொள் கையை அக்காலத்திலேயே இந்தக் குறளில் வள்ளுவர்
பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/7
Appearance