பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ல் வி 7 சொல்லிவிட்டுப் போயிருக்கிருர்-என்பதுதான்! இதனைச் சிறிது விளங்க நோக்குவாம்: தோண்டிய அளவிற் கேற்பக் கேணி சுரப்பதுபோல், கற்ற அளவிற் கேற்ப அறிவு சுரக்கும்- என்பது குறட் கருத்து. கேணி தோண்டுபவர்கள், வெளியிலிருந்து புதுத் தண்ணீர் கொண்டு வந்தா கேணிக்குள் கொட்டுகின்றனர்? இல்லை; கேணிக்குள் முன்னமேயே இயற்கையாகவே இருக்கும் தண்ணீாைத்தான் தோண்டி வெளிப்படுத்து கி ன் ற னர் . அ து போலவே, கல்வித்துறையில் பார்த்தாலும், புதிதாக ஒருவர் மற்ருெருவர்க்கு அறி வைக் கொண்டுபோய்ப் புகுத்திவிட முடியாது ; இருக்கிற அறிவைத்தான் வெளிப்படுத்தி வளர்க்கின்றனர். இது தான் இந்தக் குறளின் கருத்து-இக்காலக் கல்விக் கொள் கையும் இதுதான்! எனவே, ஆசிரியர், மாணவனே நோக்கி, மண்டுவே மடையனே! நீ எங்கே உருப்படப் போகிருய்? என்றெல்லாம் வைது ஊக்கத்தைக் குறைக்கலாகாது. முயன்ருல் எதையும் முடிக்கும் எல்லா ஆற்றலும் ஏற்கெ னவே பெற்றிருக்கின்ற ஒர் உயர்ந்த உயிர்ப்பொருளாக அவனே மதித்து, கெட்டிக்காரன் என்று தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி, அவனுடைய அறிவாற்றலை வளர்த்துவிட வேண்டும். இப்பணியில் ஆசிரியருடன் பெறருேர்க்கும் போதிய பங்கு இருக்கவேண்டும். மாணுக்கர்களும் அகல ஆழப்படித்து அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் இதுதானே, கற்றனைத் தாறும் அறிவு என்று திருவாய் மலர்ந்தருளிய திருவள்ளுவனரின் நோக்கமாக இருக்க முடியும்? - தோண்டிய அளவிற்கேற்ப நீரூறும் என்பதில், தோண்டிய அளவு என்பது என்ன? கேணியை அகல மாய்த் தோண்டுதல்-ஆழமாய்த் தோண்டுதல் என்பது தானே! அதுபோலவே கல்வியையும் அகலமாய்க் கற்க வேண்டும் - ஆழமாய்க் கற்கவேண்டுமல்லவா ? அப்படி யென்ருல் என்ன? பலகாலம் கற்றல்-பல நூற்களைக்கற்றல் -பல கலைகளையுங் கற்றல்தான் அகலமாய்க் கற்றல் என்பது. ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஐயந்திரிபற முற்ற முடிய நுண்ணிதின் கற்றுத் துறைபோதல்தான் ஆழமாயக்