பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பொருட்பால் கற்றல் என்பது. இவ்வளவு விரிந்த கருத்துக்களைக் கற்ற னேத் தாறு மறிவு என்னும் தொடருக்குக் கொள்ளவேண் டும் என்பதை, தொட்டனத்துறும் மணற்கேணி என் னும் எடுத்துக்காட்டால் பெறவைத்தார் ஆசிரியர். இதற்கு 'எடுத்துக்காட்டு உவமையணி எனப் பெயர் கொடுத்துள் ளனர் அணியிலக்கண நூலார். தொடுதல் என்ருல் தோண்டுதல் என்று பொருள் கண்டோம். அது எப்படி? அது மிகவும் என் உள்ளத் தைத் தொட்டது என்று உலக வழக்கில் பேசுகிருேம் உள்ளேயிருக்கும் உள்ளத்தைத் தொடுவதென்ருல் எவ் வளவு ஊடுருவிச் சென்றிருக்க வேண்டும்! அது போலவே, கேணி தொடுதல் என்ருல், மண்ணை ஊடுருவிச் சென்று உள்ளேயிருக்கும் தண்ணீரைத் தொடுதலோ? இங்கே இன் னும் ஒரழகு என்னவென்முல் கற்றல் (கல்வி) என்பதின் பகுதியாகிய கல் (கல்லுதல் என்பதற்கும் தோண்டுதல்துருவுதல் என்றுதான் பொருள். மேலும் இங்கே ஊறும்' என்ற சொல்லையும் ஊன்றி நோக்கவேண்டும். ஊறுதல்ஊற்றெடுத்தல் என்ருல், உள்ளேயிருக்கிற பொருள் வெளிப்பட்டுப் பெருகுதல் தானே! கல்வி பற்றிய உளநூல் கொள்கையும் இதுதானே! இன்னும் இங்கே, மணற்கேணி, மாந்தர்க்கு என் லும் சொற்களையும் துருவி நோக்கவேண்டும். கற்றனைத் அாறும் அறிவு' என்று சொன்னல் போதாதா? மாந்தர்க்கு என்று வேறு சொல்லவேண்டுமா? அவ்வாறு சொல்லா விடின் மாட்டுக்கு அறிவு ஊறும் என்று சொன்னதாக எவரேனும் எண்ணி விடுவாரா? மாந்தர்க்கு என்று கூறி யதில் கருத்து மிகவுண்டு. மாந்தருள் பலர், விலங்குகளைப் போலப் படிக்காதவாா யுள்ளனர். விலங்குசள் அன் றைக்கு இருந்தாற்போலவே இன்றைக்கும் இருக்கின்றன -அன்றைக்கு வாழ்ந்த வாழ்க்கையே இன்றைக்கும் வாழ் கின்றன. அந்தோ! மக்களுள்ளும் பலர் அவற்றைப் போலவே இன்றும் இருக்கின்றனரே! என்ன எளிமை! விலங்குகளின் தலையெழுத்து இவர்களுக்கு வேண்டி யதில்லையே. இவர்கள் அவற்றினும் தனியறிவு பெற்றவர் களாயிற்றே அவ்வறிவை மேலும் கல்வியினல் வளர்த்துக்