பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகையணங்குறுததல் 5 மருண்ட பார்வை உடையதா? என்று கேட்டால், இம் மூன்று தன்மைகளையுமே கலந்து பெற்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ' கூற்றமோ கண்ணுே பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்று முடைத்து ” (பதவுரை) மடவரல் நோக்கம் = இந்த இளம் பெண் னின் கண்பார்வை, கூற்றமோ = (என்னைக் கொல்வது போல் பார்ப்பதால்) எமப் பார்வையோ? கண்ணுே = (ஒவ்வொரு நேரம் என்னை உள்ளன்போடு பார்ப்பதுபோல் தெரிவதால்) உண்மையான கண்பார்வைதானே? அல்லது, பிணையோ = (சிலநேரம் மருண்டு மருண்டுமிரண்டுமிரண்டு பார்ப்பதால்) பெண்மானின் பார்வைதானே? (இல்லை யில்லே) இம்மூன்றும் உடைத்து-இந்த மூன்று தன்மை களையுமே ஒருங்கு கலந்து பெற்றுள்ளது. (கூற்றம்-எமன் பிணை-பெண்மான், மடவரல்-இளம் பெண்,) (மணக்குடவருாை) கொடுமை செய்தலால் கூற்றமோ? ஒடுதலால் கண்ணுே வெருவுதலால் மானே? إنه قالهـام கினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. (பரிமேலழகருமை) என்னே வருத்துதலுடைமையாற் கூற்றமோ ? என்மேலோடுதலுடைமையாற் கண்ணுே ? இயல்பாக வெருவுதலுடைமையாற் பிணையோ? அறிகின்றி லேன். இம்மடவால் கண்களிளுேக்கம் இம்மூன்றன் றன்மையையு முடைத்தாயிராகின்றது. (விரிவுரை) அவளது கண்பார்வை தன்னை வருத்திய தால் கூற்றமோ என்ருன் அவன். சிலநேரம் அன்போடு ஆசையோடு பார்ப்பதாகப் பட்டதால் உண்மையான