பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காமத் துப்பால் கண்ணுே என்ருன் வெளியிடத்திலே புதிய ஆண்மகனேக் கண்டதால் ஏற்பட்ட காணத்தோடும் அச்சத்தோடும், சுழல் விளக்குபோல் மேலுங் கீழும் சுற்றிச் சுழற்றி மிரண்டு மிரண்டும் பார்ப்பதால், மருண்டு மருண்டு பார்த் தோடும் மான் பிணையோ என்ருன். இவற்றுள் எங்த ஒன்ருகத்துணிந்து கூறுவது? நேரத்துக்கு ஒரு நிறமளிக்கும் வெல்வெட் (Welvet) பட்டுத் துணியைப்போல, நேரத் துக்கு ஒரு குணம் தெரிகிறது. எனவே, அவளது கண் பார் வையில் மூன்று தன்மைகளுமே ஒருங்கு அமைந்திருப்பதாக உரைத்தான் அவன். இங்கே யானை பார்த்த குருடர்கள் கதை நினைவிற்கு வருகிறது. வாலேமட்டும் தடவிப்பார்த்த குருடன், யானே விளக்குமாறுபோல் இருக்கிறது' என்ருனும், காலே மட்டும் தடவிப் பார்த்த குருடன் யானே உரல்போல் இருக்கிறது’ என்ரும்ை.காதைமட்டும் தடவிப்பார்த்த குருடன் யானே முறம்போல் இருக்கிறது' என்ருளும். தும்பிக்கையை மட்டும் தடவிப்பார்த்த குருடன் யானை உலக்கைபோல் இருக்கிறது என்ரும்ை. ஆனால், இந்த ஒவ்வொன்றும் மட்டும் யானையாகாதே! இத்துணையும் யானையிடம் உள் ளன. இது போலவே, அம்மூன்று தன்மைகளும் அவளது கண் பார்வையில் உள்ளன. இந்தக்குறளில் சுருதி கொஞ்சம் இறங்கியிருக்கிறது, கொலை கோக்கோடு ஏதோ குறிப்பு நோக்கும் கலந்திருப்ப தாகக் கூறப்பட்டிருக்கின்றதல்லவா? ஆம்; பின்னர் திரு மணம் புரிந்துகொள்பவர்களாயிற்றே! 来 来 来