உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் அரசியல்-இறைமாட்சி 4. நீங்கா நிலன் ஆள்பவற்கு ' துங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனுள் பவற்கு ” (பதவுரை) தூங்காமை = சோம்பல் கொள்ளாமை யும், கல்வி = சிறந்த கல்வி உடைமையும், துணிவுடைமை = நல்ல துணிச்சல் உடைமையும் ஆகிய, இம்மூன்றும் = இந்த மூன்று பண்புகளும், கிலன் ஆள்பவற்கு = நாடா ளும் வேந்தனுக்கு, நீங்கா = நீங்காது இருக்கவேண்டியவை யாகும், (துங்குதல்-சோம்புதல், துங்காமை-சோம்பல் கொள்ளாமை : கிலன்-கிலம்-நாடு.) (மணக்குடவர் உரை) மடியின்மையும் கல்வியுடைமை யும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம் மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங் காமல் வேண்டும் (பரிமேலழகர் உரை) கிலத்தினை யாளுத் திருவுடை யாற்கு அக்காரியங்களில் விரைவுடைமையும் அவை யறி தற்கேற்ற கல்வி புடைமையும் ஆண்மையுடைமையுமாகிய இம் மூன்று.குணமும் ஒருகாலும் நீங்கா. (விரிவுரை) துங்காமை, கல்வி, துணிவு என்னும் மூன்றும் இல்லாத சோம்பேறி மடக் கோழை எவ்வாறு நாடாள முடியும் ? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே !