பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பொருட்பால் இங்கே தூங்காமை என்பது, கண்ணே முடிக்கொண்டு து ங்கு வ ைத த் தடுக்கவில்லை தூங்காமல் இருக்க முடியுமா? சோம்பல் இன்றி, விறு விறுப்பும் சுறு சுறுப்பும் விரைவும் வேகமும் உடைத்தாயிருத்தல் என் பதுதான் இங்கே பொருள். உலகில் ஒருவர் விரைந்து வேலே செய்யாமல் மெள்ளச் செய்வாராயின், அலுவலகத் தில் அவர் தூங்குகிருர் என்று கேலி பேசுவது வழக்கம். உண்மையில் அவர் அலுவலகத்தில் படுத்தா தூங்குகிருர்? அவர் படுத்துத் தூங்கவும் இல்லை, நாற்காலியில் சாய்ந்த படித் தூங்கவும் இல்லை. விழித்துக் கொண்டுதான் இருக் கிருர். அவர் அவ்வளவு வேகமாக - அதாவது ஆமை வேகத்தில் வேலை பார்க்கிருர் என்பதுதான் இதற்குப் பொருள். உண்மையில் உறங்கியே விடுகின்ற ஒரு சில (ஊக்கக்காரர்களால்தான், இல்லை யில்லை) துரக்கக்காரர் களால்தான் இந்தப் பொல்லாத விருது' எல்லார்க்கும் ஏற்பட்டது போலும் இங்கேயும் இதே கருத்துத்தான் ! ஆகவே, ஆளும் அரசனுக்குச் சுறு சுறுப்பு வேண்டும், எதையும் உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். "உயிர் போன பிறகு தண்ணிர் கொண்டுவந்து என்ன பயன் ?' இராசா சிங்காரிப்பதற்குள் பட்டணம் பறி போய் விட்டது' என்னும் பழமொழி இத்தகைய துப்புக்கெட்ட தூங்கு மூஞ்சி ஆட்சியாளர்களுக்காகவே எழு5தது. இங்கே தூங்காமை என்பதற்கு இன்னொரு பொரு ளும் இயம்பலாம். அதாவது, எதிலும் எப்போதும் கண் னும் கருத்துமாய், கவனமாய், விழிப்புடன் இருத்தல் என்பதே அப்பொருள், அதாவது ஏமாந்து போகாதிருத் தல் என்பது பொருள். உலக வழக்கில், தன் உடைமை யைப் பிறர்பால் இழந்த ஒருவனே நோக்கி, நீ துரங்கிக் கொண்டிருந்தாய்; அதல்ை அவன் அடித்துக்கொண்டு