பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைமாட்சி 9 போய் விட்டான்' என்று கூறுவது வழக்கம். இவன் ஒன் றும் தூங்கவில்லை, கவன மின்றி இருந்தான்; அதனல் ஏமாந்து போனன். அவ்வளவுதான். இங்கும் அதே கருத் துத்தான். அக்காலத்தில் ஊருக்கு ஊர் அரசர்கள் இருந்தனர். தூங்குபவனது ஆட்சியை அடுத்தவன் தட்டிக்கொண்டு போய் விடுவான். அதல்ை அரசர்கள் எப்போதும் விழிப் புடன் இருத்தல் வேண்டும். அரசர் இல்லாத இக்காலத் திலோ-அதாவது, கட்சிக்காரர்கள் ஆளுகின்ற இக்காலத் திலோ, ஆளுங்கட்சிக்காரன்துங்கில்ை,அயல்கட்சிக்காரன் பதவியைப் பறித்துக்கொள்வான். அதனலேயே ஒவ்வொரு கட்சிக்காரரும் கண்ணுக்கு விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு விழிப்புடன் இருப்பது வழக்கம். அதுகிடக்க ! பாராண்ட பழந்தமிழ் மன்னரின் பரம்பரை எங்கே? எங்கே ? ? ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே அது அழிந்து ஒழிந்து விட்டதே! அந்தோ ஐயோ, அது அழிந்து ஒழிந்து விட்டதே! ஏன், என்ன காரணம்? பிற்காலத் தமிழ் மன்னரின் பெருந்துக்கமே ! ஆமாம், பெருங் துரக் கமே! எனவே, இனியேனும் தமிழர்கள் உறக்கத்தினின்று விழித்தெழுவார்களாக! அடுத்து, ஆள்பவனுக்குக் கல்வி வேண்டும். எல்லோ ருக்குமே கட்டாயக்கல்வி வற்புறுத்தப்படுகின்ற இக்கா லத்தில், அரசனுக்குக் கல்வி வேண்டும் என்பதைப் பற்றி அவ்வளவாகப் பேச வேண்டியதில்லை. பழந்தமிழ் மன்னர் பலர் பல்கலைப் புலவர்களாகத் திகழ்ந்தமையைப் பழைய நூற்களே பறைசாற்றுகின்றன அல்லவா ? இக்காலத்தில் அரசாள்பவர் எந்தக் கல்வி பெருவிடினும் அரசியல் கல்வி, யாவது பெறுவார்களாக வள்ளுவரின் பொருட்பாலேப் படித்தால்கூடப் போதுமே! அடுத்தபடியாக, ஆள்பவனுககுத் துணிவுடைமை வேண்டும்,துணிவு என்பதற்கு,தைரியம் என்றும், துணிதல்