பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைமாட்சி 13 போயிற்றுத்தானே! இந்த மானம் இருபதாம் நூற்ருண் டில் மருந்துக்கும் கிடையாது. வெற்றிகரமாகப் பின் வாங்குங் காலமாயிற்றே இது கீழே விழுந்தாலும் மீசை யில் மண்படாத காலமாயிற்றே இது ஆல்ை அக்காலத் தமிழ் மன்னர்கள் இந்த மானமே உருவானவர்கள். போரிலே, குழந்தைகள், கிழவர்கள், பெண்கள், பேடிகள், மற்றும் கையாலாகாதவர்கள் யாரையும் கொன்றதில்லை. புறமுதுகிட்டு ஓடினும், புறமுதுகிட்டு ஓடுபவன்மேல் அம்பு போடினும் மானம் போனதாகக் கருதினர்கள். புறநானூறு போன்ற இலக்கியங்களுள் புகுந்து பார்த்தால் இந்த மானமுடைமை விளங்கும். ஒரு பிணக்குக் காரண மாக, கோப்பெருஞ் சோழன் என்னும் சோழமன்னன் உண்ணுநோன்பு கொண்டு உயிர்துறந்தான். கரிகாலனல் தன் மார்பிலே எய்யப்பட்ட அம்பு முதுகுவரையும் துளேத்துக் கொண்டு போய்விட்டதால், அம் முதுகுப் புண்ணுக்கு நாணி, பெருஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன் உண்ணு நோன்புற்று உயிர் விட்டான். இன்னும் என்ன சொல்ல வேண்டும் ? மிக அடுத்த வெளியீடு : தெவிட்டாத திருக்குறள் ஐந்தாம் பகுதி ஒன்று விலை 15 புதுக்காக ப. இராஜாராம், இண். 4065, கோவில் தெரு, டபீர்குளம் சாலே (வழி), மேவாயில், தஞ்சாவூர்.