பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாழ்க்கை 17 5. பண்பும் பயனும் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” (பதவுரை) இல்வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்லற வாழ்க்கையானது, அன்பும்=(யாவரிடத்தும்) அன்பினேயும், அறமும் = அறச் செயலினையும், உடைத்தாயின் = உடைய தாய் இருக்குமேயானல், பண்பும்=(அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும் = நன்மையும், அது= அந்த அன் பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற அச்செயலே, (தெளிவுரை பண்பு என்ருல் இலக்கணம்; அஃதா வது தன்மை. இல்வாழ்க்கைக்கு இருக்கவேண்டிய இலக்க. ணம் அன்பும், அறமும் உடைமையே. இல்வாழ்க்கையின் பலனும் அந்த அன்பும், அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க் கையை எப்படி நடத்தமுடியும்? முடியாது. அதேைலயே அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்ருர் யாவரிடமும் அன்பு காட்டுவதும், அறம் செய்' வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண் டும் உடைமை இல்வாழ்க்கையின் பலனும் ஆகும் என்ருர். இஃதென்ன ! ஒன்றையே இலக்கணமாகவும், பலகை வும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறு விதமாக உரை பகர்வாாாயினர். கூர்ந்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று வருக : பிள்ளையின் இலக்கணம் பெற்ருோைக் காப்பாற்றுத அலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒரு வர் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அவ்விரண்டுக் தானே பிள்ளையினல் உண்டாகும் பயனுங்கூட எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்கவேண்டாவன் ருே?