உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 க்ாமத் துப் பால் (ஆராய்ச்சி விரிவுரை) உயிர் உண்ணல் என்ருல் உயிரைப் போக்குதல் - தொலைத்தல். இந்தப் பொருள் எந்த அகராதியில் உள்ளது? வேண்டியதில்லை-பணம் போட்டு வாங்கிய எந்த அகராதியும் இங்கு வேண்டிய தில்லை. மக்கள் அகராதியில் இதனேக் காணலாம்; அதா வது, மக்களது பேச்சு வழக்கில் இதனைக்காணலாம். ஒருவன் ஒரு பொருளேத் தொலைத்து விட்டால், "அதைத் தொலைச்சு வாயில் போட்டுக் கொண்டாயா' என்று பெரியவர்கள் அவனைக் கண்டிப்பதை நாம் அறிவோம், வாயில் போட் டுக் கொள்ளலும் உண்ணலும் ஒன்றுதானே! இன்னும் சிலர் தம் எதிரியைக் குறிப்பிட்டு, 'அவன் என்ன என்ன செய்து விடுவான் ? சாப்பிட்டு விடுவானே?' அப்படியே எடுத்து விழுங்கி விடுவானே ? ' என்று காய் வதும் உண்டல்லவா? எனவே, உண்ணல், வாயில் போட்டுக் கொள்ளல், சாப்பிடுதல், விழுங்கல் என்னும் சொற்கள், தொலைத்தல்- அழித்தல் என்னும் பொருள் தருவதை கோக்குக. இச் சொல் வழக்கு மக்களது பேச்சில் எவ்வாறு புகுந்தது? எப்போது புகுந்தது மிக மிகப்பழங் காலத்தில் உயிரைத் தொலைத்துத்தானே உண்டார்கள்? அதாவது, மக்கள் வேட்டையாடித்தானே உண்டார்கள்? மக்களுக்கு மக்கள் கொன்றும் உண் டார்களாம். பின்னரே பயிர்த்தொழில் வளர்ந்தது? இப்போதும், மக்கள் விலங்குமுதலியவற்றையும், விலங்குமுதலியனவும் பிறவற்றையும் உயிர் போக்கி உண்ணல் நடைபெறு கிறதே! இந்த அடிப்படையில் அன்று தொட்டு எழுந்தது தான் இச் சொல் வழக்கு! அடுத்து, இக் குறளில், தோற்றம்' என்ருல் பார்வை என்பது பொருள். இப்பொழுதெல்லாம் எனக்குத் தோற்றம் சரியாய்ப் புலப்படுவதில்லே ' என்று கிழங்கள் முணுமுணுப்பதை நாம் கேட்கின்ருேம் அல்லவா? பார்வை என்ற பொருளில்தானே தோற்றம் என்ற சோல்கின்றனர் வயதானவர்கள்.