பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காமத் துப் பால் பார்வைக்கு ஒன்றும் அறியாத இளஞ்சிறுமி போல் காணப் படுகிருள். (இவள், உண்மையில், ஏழு வயது நிரம்பாத இளஞ் சிறுமியல்லள். இளம் பெண் என்பதை அறிவிக் கும் ஒரு கற்பனையே.) ஆல்ை. அவள் பார்வையிலோ கொலைக் கொடுமை இருக்கிறதே! இஃதென்ன வியப்பு இயற்கைக்கு மாருயுள்ளதே! இவ்வாறெல்லாம் இக்கும் ளுக்குப் பொருள் நயம் உரைத்துக் கொள்க, கண் பார்வையின் கொடுமை படிப்படியாக மிகுகிறது. இக்குறளுக்கு முன்முன் குறளில் கண்ணுேக்கை, அணங்கு படைகொண்டுவந்து தாக்குவதாகப் புனைந்தார் (வருணித் தார்), முன் குறளில் எமனென எடுத்தோதினர்; இக்குற ளிலே கண்டவரது உயிரை உண்ணுவதாக உரைத்துள் ளார். படைகொண்டு தாக்குங்காலும், படை உடம்போடு தொடர்பு கொண்டால்தான் உயிர்போகும்; எ ம ன் உயிரைப் பிடிக்க வந்தாலும், அருகேவந்து ஏதோ (பாசக்) கயிற்றை வீசி எறிந்து கட்டி யிழுப்பதாகக் கதையளப்பது வழக்கம். ஆனல் இவள் கண் பார்வையோ படையையும் எமனேயும் மிஞ்சிவிட்டது. அருகே வராமலேயே, உடம் போடு தொடர்பு கொள்ளாமலேயே, தொலைவிலே இருக் கும் போதே, கண்ணுல் பார்த்த அளவிலேயே உயிரைக் கொல்லுகிறதே! என்ன கொடுமை! எவ்வளவு கொடுமை! இதைத்தான் " கண்டார் உயிர் உண்ணும் தோற்றம் ” என்று கற்பனை செய்தார் ஆசிரியர். என்ன அழகு என்ன அழகு அணுவுக்குள் ஆழ்கடல் என்பது திருக்குறளுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்! 5. கூற்றமோ கண்ணுே (தெளிவுரை) இப்பெண்ணின் கண் நோக்கு, கூற்று வனது கொலேத் தொழில் உடையதா? அல்லது, கண்ணுக் குரிய கண்ணுேட்டம் பெற்றதா? அல்லது, மானினது